சாய் ஜூன், இளந்தமிழ் ஆகிய இருவரின் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த நூலின் உள்ளே வரலாறு என்னும் பேராறு வற்றாமல் புரண்டு கொண்டே இருக்கிறது. அது வெறுமனே நனைத்துப் போகாமல் தன்னுள்ளே இழுத்துக் கொள்கிறது. அத்தனை சுவாரசியமான நடை. சிறுகதையைப் போலச் சிறகு விரிக்கும் வடிவம். வடிவத்தைக் காக்கும் முனைப்பில் வரலாற்றைக் கோட்டை விட்டுவிடாத கவனம். வரலாற்று நாயகர்களைப் பற்றிப் பேசும்போது, மிதமிஞ்சிய புகழ்ச்சிகளைத் தவிர்த்திருக்கும் நுட்பம். பெரியோர் எனில் வியத்தலும் இலமே, சிறியோர் எனில் இகழ்தல் அதனினும் இலமே என்ற கணியன் இவர்களது மனங்களுக்குள் மறைந்து நின்று கரங்களை வழிபடுத்தியிருக்கிறார்.
எனது இந்த இரு நண்பர்களின் இம்முயற்சி எனக்கு கர்வம் தருகிறது. வாசியுங்கள், உங்கள் உள்ளே உள்ள பல கதவுகளை அது திறந்துவிடும்.
- மாலன்
Be the first to rate this book.