டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வாய்ப்புக் குறைந்த ஒரு சமூகத்திலிருந்து வந்தவர். பெண்கள் திருமணம் செய்துகொள்ளவே பிறந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. டாக்டர் ரெட்டியின் தளர்வுறாத ஆற்றலும் துணிச்சலும் அவர் வழியில் குறுக்கிட்ட எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு 1912இல் இந்தியாவில் முதல் பெண் மருத்துவராகவும் 1927இல் சட்டசபையில் தலைமை வகித்த முதல் பெண்ணாகவும் வரலாற்றில் இடம் பெற உதவின.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். முழுமையான ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் தன்னுடைய நாட்டின் சகமனிதர்களுக்கு அவர் செய்த சேவைக்கும் முழுமையான சிறந்த வாழ்க்கையை வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கும் நன்றி கூறுகிறோம். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
டாக்டர் ரெட்டி 1968 ஜூலை 22ஆம் நாள் மறைந்தபோது உலகம் அந்த உன்னதமான பெண்மணிக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்து மரியாதை செலுத்தியது. அறியாமையும் நலிவும் நிறைந்த மரபில் பிறந்து, சூழ்ந்திருக்கும் இருளைப் போக்கி, கடலிலிருந்து புறப்படும் சூரியன் போலத் தோன்றி, உதவியற்ற பெண்களின் ஆத்மாவுக்கும் உடலுக்கும் அவர் ஒளியூட்டினார்.
Be the first to rate this book.