பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல் பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.
டாக்டர் ஜெகில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவர். நல்ல மனிதர். கொடூரமான குணமும் கோரமான உருவமும் கொண்டவர் மிஸ்டர் ஹைட். மனிதாபிமானம் இல்லாத பல செயல்களைச் செய்யும் ஹைடுக்கு டாக்டர் ஜெகில் பண உதவி செய்கிறார் என்பதைக் கண்டறிகிறார் வழக்கறிஞர் அட்டர்சன். டாக்டர் ஜெகிலுக்கும் ஹைடுக்கும் என்ன உறவு, ஏன் உதவுகிறார், அட்டர்சன் ரகசியங்களைக் கண்டுபிடித்தாரா, ஹைட் போலீஸிடம் மாட்டிக்கொண்டாரா, டாக்டர் ஜெகில் என்ன ஆனார் என்பதை திக் திக் திருப்பங்களுடன் சொல்கிறது இந்த நாவல்.
Be the first to rate this book.