மருத்துவ சந்தேகங்கள் நிறைய எழும் காலம் இது. அன்றைக்குப் பலரும் அண்டை அயலார், உறவினர்களிடம் இதற்கு ஆலோசனை கேட்டார்கள். இன்றைக்குப் பலரும் கூகுள் மருத்துவரிடம் தஞ்சமடைந்து, மருத்துவ சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறார்கள். இது தேவையற்ற குழப்பத்துக்கும், நோய் தீவிரமடைவதற்கும் காரணமாகிவிடுகிறது..
டாக்டர் கு.கணேசன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறை சார்ந்து எளிய தமிழில், சாதாரண மக்களும் மருத்துவ அறிவியலை புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி எழுதிவருபவர். மக்களை அச்சுறுத்தாமல், அறிவூட்டும் வகையிலும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் பொறுப்புள்ள ஒரு மருத்துவராக எழுதிவருகிறார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ச்சியாக அவர் எழுதிவருகிறார். அவருடைய கட்டுரைகள் பரவலான வரவேற்பைப் பெற்றவை. இந்த நிலையில் வாசகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மருத்துவ சந்தேகங்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அனுப்பினர். அதற்கு டாக்டர் கு.கணேசன் அளித்த பதில்கள் வரவேற்பைப் பெற்றன. அதுவே தற்போது நூலாகத் தொகுக்கப்பட்டு்ள்ளது.
நமக்கு எழும் பொதுவான மருத்துவச் சந்தேகங்கள், குழப்பங்கள், சிக்கல்களுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக, துணையாக அமையும். படுத்துக்கொண்டே செல்போன் பார்த்தால் தலைவலி வருமா, ஷவர்மா சாப்பிட்டு ஏற்படும் உயிரிழப்புக்குக் காரணம், இதய பலவீனமும் தண்ணீர் குடிக்க வேண்டிய அளவும், குறட்டையைச் சரிசெய்வது எப்படி, சர்க்கரை நோயுள்ளவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாமா, சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கலாமா - இப்படி பல்வேறு சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. இது போன்ற 180க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு டாக்டர் கு.கணேசன் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூலில் பதில் தந்துள்ளார்.
Be the first to rate this book.