இந்நூலில் உள்ள படைப்புகள் சமகால அரசியலையும் சமூக நிகழ்வுகளின் வழியே குடும்பம், சினிமா, தனிமனிதன் சார்ந்த அன்றாட பிரச்சனைகளை பற்றிப் பேசுகிறது. மேலும் இந்நூலாசிரியர் வங்கி தொழிற்சங்கத்தில் பணியாற்றுகிறார். தமிழ் சூழலில் பெரும்பாலான புத்தகங்கள் கதை, கட்டுரை, கவிதை என்று ஏதோ ஒன்றாக வெளிவரக்கூடிய சூழலில் இந்த நூல் கட்டுரையாகவும் கதையாகவும் வெளிவந்துள்ளது. இதனால் வாசக மனநிலைக்கு ஒரு புதுவித வாசிப்பு அனுபவம் அமையும்.
மேலும் இந்தப் படைப்புகள் தமிழகத்தின் முன்னணி இதழ்களான அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கணையாழி, தினமலர் - வாரமலர், ராணி, தினமணி கதிர், க்ரஹஷோபா, தினமலர், ஜனசக்தி ஆகியவற்றில் வெளியானவை.
Be the first to rate this book.