ஆய்வுக் கட்டுரைகள், விழிப்புணர்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், குறும்புதினங்கள் மற்றும் நெடும்புதினங்கள் என பல தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்சலின் சிறுகதைகள் விளிம்புநிலை மக்களிடையே இழைந்தோடும் பரஸ்பர அன்பின் பரிமாறல்களையும் மாற்றங்களையும் கோடிட்டு காட்டும் விதமாய் அமைந்திருக்கின்றன. மெல்லிய இழையாய் நீரோடையைப் போல் குளிர்வித்து பயணிக்கும் காதலை கதைமாந்தர்களிடத்தில் இருந்து வாசகர்களிடத்தில் மடை மாற்றுவதிலும் தேர்ந்த கதைசொல்லியாய் மாறி எழுத்தை சுவாசிக்கச் செய்கிறார்.
சுமார் நாற்பது ஆண்டுக்கான நினைவுப் பொக்கிஷத்தை, சேமித்து வைத்திருந்த புரதானக் கிடங்கிலிருந்து வெளிக்கொணர்ந்து அவற்றை படைப்பாய் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பல தரப்பட்ட எழுத்தூடகங்களில் பிரசுரமாகி பலரது பாராட்டுதல்களையும் பெற்றவை இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் இவரது சிறுகதைகள். தான் சந்தித்த, தன்னோடு சகபயணிகளாய் வாழ்க்கைப் பயணத்தில் பயணித்த ஏனையோரையும் கதைமாந்தர்களாய் இழையோட விட்டிருக்கும் நேர்த்தியும் மெச்சுதற்குரியது.
உள்ளுக்குள் குழைந்தோடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை வண்ணமயமாக்கி அதை எழுத்தின் வடிவில் படிக்கத் துடிக்கும் எல்லோருக்கும் இவரது படைப்புகள் வடிகாலாய் அமையுமென நம்புகிறோம். வாசித்தலென்பது சுகானுபவம். இச்சிறுகதைத் தொகுப்பான ”தினசரி 3 காட்சிகள்” அவ்வரிய அனுபவத்தை அளிக்கும்.
Be the first to rate this book.