இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகின்ற நாம் பேறுபெற்றவர்கள். கடந்துபோன வேறெந்த நூற்றாண்டு மனிதனுக்கும் கிட்டிராத அளப்பரிய வசதிகளையும் வாய்ப்புகளையும் நவீன விஞ்ஞானம் நம் வாசல் முன் கொண்டு வந்து குவித்திருக்கிறது. நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது கண்டுப்பிடிப்புகளால் மனித வாழ்வை வளப்படுத்தியும் வருகிறது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வீரியத்தோடு வேகமெடுக்கத் துவங்கிய டிஜிட்டல் தொழில்நுட்பம், இன்று அனைத்து துறைகளையும் தன் ஆக்டோபஸ் கரங்களின் பிடியில் வைத்திருக்கிறது. ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என்பதுபோல, எதிர்காலத்தில் கணினி தொடர்பான தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெறாத எந்த மனிதனும் அரை மனிதன் என்றே கருதப்படுவான். அந்த வகையில், இன்றைக்குத் தொழில்நுட்பத்தில் விரும்பத்தக்க புரட்சிகளையும், மனித தேவைக்கேற்ற வாழ்வியல் மாற்றங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறுவி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் சாதனைகளின் நீள, அகலங்களை ‘ஜுனியர் விகடன்’&ல் தொடர் கட்டுரைகளாக எழுதி நம்மோடு பகிர்ந்துகொண்டார் ஆர்.வெங்கடேஷ். இந்த ‘டிஜிட்டல் உலகத்தை’ தேர்ந்த சிற்பி
Be the first to rate this book.