கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மூதாதையான துஷ்யந்தன் ஹஸ்தினாபுரத்தை ஆண்ட ஒரு மன்னன். 'தீமையை அழிப்பவன்" என்பதே அவனது பெயரின் பொருள். அவன் இலிலன் மற்றும் ரதந்தரி ஆகியோருக்குப் பிறந்தவன்.
மகாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாக வரும் இவனது கதையில், இயற்கை வர்ணனையும், மனைவி மற்றும் மகனைக் குறித்த நீதிகளும், விருந்தினரை உபசரிக்கும் முறைகளும், திருமணத்தின் வகைகளும் சிறப்புடன் சொல்லப்படுகின்றன. இக்கதையிலேயே விஷ்வாமித்திரர் மற்றும் மேனகையின் கதையும் சொல்லப்படுகிறது.
இந்தப் புத்தகத்தில், கிசாரி மோகன் கங்குலியின் மகாபாரதப் பதிப்பில் வகும் 'துஷ்யந்தன் சகுந்தலை" கதையே சொல்லப்படுகிறது. சிற்சில தேவையான இடங்களில் மட்டும் வேறு சில நம்பகமான பதிப்புகளில் இருந்து சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பரந்த பாரத நாட்டின் பெயருக்குக் காரணமான பரதனின் பெற்றோரான துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் கதையை, மகாபாரத் மூலத்தில் உள்ளவாறே அறிவோம் வாருங்கள்.
Be the first to rate this book.