நாட்டார் வழக்காறுகள் வழி பண்பாட்டு வரலாற்றை உருவாக்கும் முனைப்பில் களஆய்வு செய்து அதனடிப்படையில் எழுதப்பட்ட தேர்ச்சியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இந்நூலின் பொதுவான தன்மையே புத்தகங்களுக்கு அப்பால் உள்ள செய்திகளைச் சேகரித்து எழுதப்பட்டவை என்பதேயாகும். தோல் பாவைக்கூத்துக் கலைஞர்கள் குறித்தும் அக்கலையில் காலந்தோறும் நிகழ்ந்த மாற்றச் சிதைவுகள் குறித்தும் திரட்டப்பட்ட தரவுகள் புதிய செய்திகளை வழங்குகின்றன. நாட்டார் தெய்வ வழிபாட்டின் கூறுகளான பலவித உருவ வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் வாய்மொழிக் கதைகளையும் விவரிக்கும் இந்நூல் தமிழ்ச்சமூகப் பண்பாட்டின் வெவ்வேறு அம்சங்களை வெளிச்சப்படுத்துகிறது.
Be the first to rate this book.