இத்தொகுப்பில் உள்ள குறுங்கதைகள் மனித உறவுகளிடையில் அரங்கேறும் நாடகத் தருணங்களைப் பகடி செய்து அவற்றின் முரண்பாட்டைக் குறிப்புணர்த்துகின்றன. பல கதைகள் வாழ்க்கை குறித்த மரபான நம்பிக்கைகளைத் தகர்ப்பவை. கதைத்தன்மைக்குப் பதிலாக எளிதில் கடந்துவிட முடியாத நுண்சித்தரிப்புகளை முன்வைக்கின்றன. அலங்காரங்களுக்கும் வர்ணனைகளுக்கும் இடமளிக்காத சுரேஷ்குமார இந்திரஜித்தின் எழுத்து இந்தத் தொகுப்பில் மேலும் செறிவாக வெளிப்பட்டு குறுங்கதை இலக்கியத்தில் ஒரு முக்கியமான முன்னகர்வை நிகழ்த்தியுள்ளது.
Be the first to rate this book.