இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன்.
இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை. அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட. மண்ணின் பாவனைகளே பருவங்களும் பொழுதுகளும் என்பதுபோல. அவையே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன.
– ஜெயமோகன்
Be the first to rate this book.