இத்தொகுப்புக்காக இதிலுள்ள பத்துக் கதைகளையும் ஒருசேர வாசித்த போது எனக்குத் திருப்தியாக இருந்தது. மூன்று கதைகள் வெகுசிறப்பாகவும் நான்கு கதைகள் சரியான வடிவமைதியுடனும் மிச்ச கதைகள் வாசிக்கத்தக்கவையாகவும் உள்ளன. தமிழில் பிற சிறுகதையாளர்கள் பரிசீலிக்காத களங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முன்னோடிகளின் சாயல் அதிகம் தெரியாமல் எழுதியிருக்கிறேன்.
என்னுடைய முதல் தொகுப்பில் இடம்பெறாத சில கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 2000இல் நான் எழுதிய கதை முதல் 2012-2020 காலகட்டத்தில் எழுதிய கதைகள் வரை இதில் வருகின்றன. உறவுச்சிக்கல்கள், தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான உறவு எத்தகையது, வாழ்வு நம்மைச் செலுத்துகிறதா? அல்லது நாம் அதனைக் கட்டுப்படுத்துகிறோமா? அல்லது நம்மையும் இவ்வாழ்வையும் மீறிய ஒரு சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறோமா எனும் கேள்விகளையே இந்த இரு பத்தாண்டுகளின் கதைகளில் பரிசீலித்திருக்கிறேன்.
- ஆர். அபிலாஷ்
Be the first to rate this book.