கிழக்கும் மேற்கும் கொண்டாடும் ஞானியாக விளங்கிய கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர். 48 ஆண்டுகள் (1883-1931) ஒரு மின்னல் கீற்றுப் போல் வாழ்ந்து மறைந்தவர்.
1923 இல் அவர் எழுதி வெளிவந்த தேவதூதர் (The Prophet) உன்னத இலக்கியவாணர் வரிசையில் அவரை உடனடியாகக் கொண்டு சேர்த்தது.
பன்முறை உலகத்து மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்கும் பெருமைக்கும் உரியது தேவதூதர் நூல்.
இன்னொரு காலத்துக்கும் இன்னொரு உலகத்துக்கும் நம்மை ஈர்த்துச் சென்று விடுகிற ஆற்றல் கலீல் ஜிப்ரானின் தரிசனம் என்று கூறத்தக்க தேவதூதர் நூலுக்கு உண்டு.
இதே நூலில் பெரிதும் வாசகர்கள் அறிந்திராத தேவதூதரின் தோட்டம் (The Garden of the Prophet) என்ற சிறு நூலும் இணைக்கப்பட்டுள்ளது.
தேவதூதரின் தோட்டம் அழகிய தொடர்ச்சியாக விளங்குவதால், அந்நூல் இந்நூலுடன் இணைந்து வெளியிடப்படுகிறது.
Be the first to rate this book.