இது ஜீ முருகனின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். இதற்கு முன் சாயும்காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல்நிற தேவதை. கண்ணாடி ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கண்ணாடித் தொகுப்புக்கு சுஜுத்தா அறக்கட்டளை மற்றும் உயிர்மை விருதும், இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய 'காண்டாமிருகம்' தொகுப்புக்கு ஆனந்தவிகடன் விருதும் கிடைத்துள்ளன. 'மின்மினிகளின் கனவுக்காலம்', 'மரம்' ஆகியவை இவரது நாவல்கள். இனியவன் இறந்துவிட்டான்' இவரது குறுநாவல். `காட்டோவியம்' கவிதைத் தொகுப்பும். 'ஆந்த்ரே தார்க்கோவஸ்கியின் காவியங்கள் ஏழு என்ற திரைப்பட விமர்சன கட்டுரைகள் அடங்கிய தொகுப்பும் வெளிவந்துள்ளன
அவன் சொன்னான், "நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரழிவுக்கு முன் ஆந்த்ரேய் போன்ற ஒரு கலைஞன் என்ன செய்வான்? மனிதர்களின் உள்ளார்ந்த விருப்பங்கள் நிறைவேறும் அறை ஒன்றை கற்பனை செய்யலாம். சதுக்கத்தின் முன் நின்று அந்த அழிவை உரக்க அறிவித்துவிட்டு தன்னையே தீயிட்டு எரித்துக் கொள்ளலாம், குளத்தின் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு எரியும் மெழுகுவர்த்தியை அணையாமல் எடுத்துச் செல்லும் ஒரு சடங்கைச் செய்யலாம், புதிரான தன் வேலைக்காரியோடு படுக்கையை பகர்ந்துகொள்ளலாம். கடவுளிடம் சரணடைந்து தன் வீட்டை எரிக்கலாம், இறுதி நம்பிக்கையாக நோவாவின் கப்பல் போல ரயில் ஒன்றை வடிவமைக்கலாம்..."
Be the first to rate this book.