நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து.
Be the first to rate this book.