சீனா, அமெரிக்கா, ரஷ்யா, வடகொரியா என உலகத்தின் திசைமுழுக்க எழும் தேசியத்தை தேசியமென ஒப்புக்கொள்கிறவர்கள் தான், தமிழ்த் தேசியத்தை இனவாதமாக, சாதிய ஆதிக்கவாதமாக சித்தரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையை தேசியத்திற்குள் இருக்கும் ஜனநாயக அணுகுமுறைகளோடு துடைத்தழிக்கும் வாதங்களையும் படைப்புக்களையும் முன் எடுப்பவர்களாக தமிழ்த் தேசியவாதிகள் இருக்க வேண்டும்.
“அரசியல் தீர்மானங்களில் மக்களுக்குப்பங்கில்லை என்றால், அங்கு மக்களுக்கு என்று எதுவுமில்லை” என இந்த நூலில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தை தனது மூளையில் அழியாத மைகொண்டு எழுத வேண்டிய பொறுப்பு தேசிய வாழத்திற்கிருக்கிறது. மு.திருநாவுக்கரசு அவர்கள் இந்நூலில் எழுதியிருக்கும் ஐந்து கட்டுரைகளும் வெவ்வேறு வரலாறுகளில் தொடங்கி மீண்டும் மீண்டும் தேசியத்தின் ஜனநாயகத்தை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
- அகரமுதல்வன்
Be the first to rate this book.