இந்திய உயர்கல்வியுடன் தொடர்புடைய தேவைகள், நிலவுகின்ற நிலைமைகள், பிரச்சினைகள், சவால்களைத் திறம்பட நிறைவேற்றிக் கொள்வதற்கு மேற்கூறிய கட்டமைப்பானது பொருத்தமானதுதானா என்பதைக் கண்டறிந்து கொள்வதற்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. அந்தக் கேள்விகளின் வெளிச்சத்தில் நான் எந்தவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டு இந்த கட்டமைப்பு குறித்து விரிவான மறுஆய்வு, மேலதிக விசாரணை தேவைப்படுகிறது என்றே உறுதியாக நம்புகிறேன்.
கல்வி தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பை எதிர்ப்பது என்பது வெறுமனே கண்மூடித்தனமான எதிர்ப்பு என்றில்லாமல், இதுபோன்ற முயற்சிகளின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தி அதை மக்களிடம் கொண்டு செல்வதையே இறுதி இலக்காகக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொகுப்பின் உள்ளடக்கம் தொடர்பான விஷயங்கள் என்னுடைய அதிகார வரம்பிற்குள் இருப்பதால், அவற்றை ஆய்வு செய்து அவற்றின் விளைவை சக மக்களுடன், முக்கியமாக என்னை விமர்சிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பொறுப்பு என்றே நான் உணர்கிறேன்.
Be the first to rate this book.