இவ்வுலகில் முருகக் கடவுளின் திருத்தலங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன, அதன் சிறப்பு, விசேஷ காலங்களில் அந்தக் கோயில்களில் நடைபெறும் விழாக்கள், அந்தக் கோயில்களில் முருகனின் வரலாறு, அவனுடைய லீலைகள், அண்டை நாடுகளிலும் ஆலயங்களில் இருந்துகொண்டு எப்படி அவன் அருள்பாலிக்கிறான்; தமிழகத்தில் சீர்மிகுந்து காணப்படும் அவனுக்குரிய சிறப்பான இடங்கள் எவை என்பன போன்ற வரலாற்றுத் தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. தென்னகத்தில் தமிழ்க்கடவுளாக வணங்கப்படுகிறான் முருகன். வடக்கே ஸ்கந்தனாக அறியப்படுகிறான் அந்த அழகன். தமிழர்கள் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் தன் அருட்பார்வை சாம்ராஜ்யத்தைப் பரவவிட்டுள்ள முருகக் கடவுளைப் பற்றி, நமக்குத் தெரியாத புதிய விஷயங்களையும், பல தலங்களைப் பற்றிய சுவையான தகவல்களையும் இந்த நூல் மூலம் அறியலாம். முருகன் உலகக் கடவுள் என்பதைப் பல தரவுகள் மூலம் உறுதி செய்கிறார்.
Be the first to rate this book.