திராவிட மயக்கம், திரைப்பட மயக்கம், குடி மயக்கம், இலவசங்கள், நடுநிலையற்றுச் செயல்படும் ஊடகங்கள் என தமிழகம் பொய்கள் மற்றும் போதையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. அவற்றிலிருந்து தமிழக மக்களை மீட்க, ஊராட்சி நடப்புகள் முதல் உலக நடப்புகள் வரை கை பிடித்துக் கற்றுத்தரும் நல்ல ஆசானாகவும் நோயுற்றுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்ட மருத்துவராகவும் டாக்டர் க.கிருஷ்ணசாமி இந்த நூலில் வெளிப்பட்டிருக்கிறார். இந்திய ஒன்றியமென்றால் தமிழகம் ஊராட்சியா? திராவிட இயக்கங்களால் சாதியை ஒழிக்க முடிந்ததா? சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் தேவையா? காஷ்மீரில் நரேந்திர மோதியும் அமித் ஷாவும் செய்தது சரியா? கீழவெண்மணியில் தேவேந்திரகுல வேளாளர்கள், புதிய கல்விக் கொள்கை, பாலஸ்தீனம் என்று விரிவாகவும் ஆழமாகவும் இன்னும் பல தலைப்புகளை துணிவோடு விவாதிக்கிறது இந்நூல். தமிழக அரசியல் களத்தில் தனித்தன்மையுடனும் சுய சிந்தனையுடன் செயல்படும் டாக்டர் க.கிருஷ்ணசாமியின் கருத்துகள் முதல்முறையாகத் தொகுக்கப்பட்டு உங்கள் கைகளில்.
Be the first to rate this book.