இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாதத்தைத் தூண்டுகிறார்.
மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் மதங்களின் வரலாற்றை மக்களுக்குப் போதிக்க வேண்டும் என்கிற மார்க்சிய வழியில் நின்று இத்தெய்வக்கதைகளைக் கற்றுக்கொள்வதும் மக்களிடம் பரவலாக்கி உரையாடல்களைத் தூண்டுவதும் நமது கடமை. கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட இப்பெண்களின் கதைகளை வாசிக்கும்போது பெண்களைச் சித்திரவதை செய்யும் ஒரு நீண்ட நெடிய வரலாறும் அனுபவமும் ருசியும் கொண்டதாக நாம் வாழும் இந்த ஆணாதிக்க சமூகம் திகழ்வதை நாம் அதிர்ச்சியுடன் உள்வாங்க முடியும். நாம் இச்சமூகத்தின் பகுதி என்பதில் குற்ற உணர்ச்சி கொள்கிறோம். இது பெண்ணுக்கு எதிரான கொடூரங்களைக் குணமாகக் கொண்ட ஓர் ஆணாதிக்க சமூகம் என்பதற்கு இத்தெய்வங்களே சாட்சி.
Be the first to rate this book.