கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950-1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த தில்லி அதிகாரவட்டத்திற்கு மிக அருகில் வாழும் வாய்ப்பும் கிருத்திகாவிற்கு இருந்தது. அப்பின்னணியையே தனது நாவல்களின் மையச்சரடாக கிருத்திகா வரித்துக் கொண்டது ஒருவிதத்தில் ஆச்சரியமானது இல்லை; ஆனால் சற்று நிதானமாகத் தமிழ் இலக்கியச் சூழலில் நிலவிய விடுதலைப் போராட்டம், புதிய இந்தியா உருவாக்கம் குறித்த சித்திரிப்புகளைச் சிந்திக்கும் போது, அவரது முயற்சி அசாத்தியமான துணிச்சலைக் காட்டுகிறது என்றே கூறவேண்டும்.
- அ. மங்கை
Be the first to rate this book.