ஒவ்வொரு சிறுகதையையும் பிரதான கதைமாந்தர்களின் வாழ்வுக்குத் தகுந்த மொழிநடையில் எழுதிப் பார்க்கும் வேட்கை கொண்டவராகவே லட்சுமிஹர் இருக்கிறார். தன் சிறுகதைகளில் வாழ்வைத் தான் கேட்டுணர்ந்த , கண்டுணர்ந்த, வாழ்ந்துணர்ந்த வகையில் பதிவு செய்வதற்குக் கூச்சப்படாதவராகவும் இருக்கிறார். தன் கதைமாந்தர்களை, கதைக்களத்தை, கதை நிகழும் காலத்தை எவ்வித விட்டுக்கொடுக்கும் தன்மையில்லாமல் தேர்ந்தெடுக்கிறார். கச்சிதமான விவரணைச் சித்தரிப்புகள், ஒற்றை வாக்கிய உரையாடல்கள் வழியே தன் எழுத்துச் செயல்பாட்டை எவ்வித பதட்டமோ பயமோ அற்று சுதந்திர மனவெளியில் அணுகிப் பயணிப்பவராக இருக்கிறார். அதேபோல் தான் கொண்ட இசங்களை திணிக்கும் முன்தீர்மானங்களோ, அரசியல் பிரச்சார சார்புகளோ அற்று நவீனமாக கதைசொல்லும் உத்தி இயல்பாகக் கைவரப் பெற்றிருக்கிறார்
- என் ஸ்ரீராம்
Be the first to rate this book.