இந்தியாவில் நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், உலகமயமாக்கலில் தலித் மக்களுக்கு அனுகூலமான சில கூறுகள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் சில தலித் சிந்தனையாளர்கள் கூறுவதை மறுதலித்து, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பரந்துபட்ட தலித் உழைக்கும் மக்களுமே என்பதைத் தக்க புள்ளிவிவரங்களுடனும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் விளக்கும் இந்த நூல், நவதாராளவாதம், உலகமயமாக்கல், இவற்றில் கணினித் தொழில் நுட்பம் ஆற்றும் பாத்திரம், உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், வாஷிங்டன் பொதுக் கருத்து முதலியனவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. உலக முதலாளியத்தை ந்திர்க்கும் போராட்டத்தில் முன்னணியில் இருக்குமாறு தலித் உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுகிறது.
Be the first to rate this book.