கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அமெரிக்காவில் இருந்துகொண்டு பௌத்த சமயத்தை தழுவி இங்கே இந்தியாவில் தியோசோ பிக்கல் சொசைட்டியை 1879ல் தொடங்கியவர். அயோத்திதாச பண்டிதர் 1898ல் அவருக்கு A Unique Petition எனும் தலைப்பில் ஒரு பகிரங்க கடிதம் எழுதினார்..... ஒருவித ஆழமான நட்பு மேலோங்குகிறது. தென்னிந்திய பறையர்கள் பௌத்தர்களே எனும் முக்கிய அணுகுமுறையோடு தியோசோபிகல் சொசைட்டி அவர்களுக்கு கல்வியளிக்கும் பணிகளைத் தொடங்குகிறது.
கல்வி குறித்த முக்கியமான புத்தகம் இது. பள்ளிக் கல்வியோடு, ஆசிரியர் பயிற்சி கூட எப்படி இருக்க வேண்டும் என்று ஆல்காட் மிக விரிவாக விவரித்து செல்கிறார். ‘பஞ்சமர் இலவச பள்ளிகள்’ பற்றிய இந்தத் தொகுப்பு நூலில் அயோத்திதாசரின் கடிதம், கர்னல் ஆல்காட் எழுதிய ஏழை பறையன் (The Poor Pariah) பறையரை எங்ஙனம் பயிற்றுவிக்கிறோம் (How We Teach Pariah) உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களின் தொகுப்பு இந்த நூல். வே. அலெக்ஸ் அவர்கள் பேரா. ஆ. சுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்பில் அவற்றைத் தொகுத்து உதவியுள்ளார். தலித் வரலாற்றில் அவசியம் இடம் பெறத்தக்க நூல்.
Be the first to rate this book.