சினிமாவை சாதாரண பொழுதுபோக்கு ஊடகமாகவோ அல்லது அரசியலைத் தவிர்த்த கலையாகவோ பாவிக்க முடியாது. 'தலித்' என்பது ஒரு சாதி அடையாளம் அல்ல. அது ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போராடும் களத்தின் வெளிப்பாடு. மற்ற இடை நிலை சாதிகளை விட, பழங்குகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள்தான் அதிகமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். 'தேவர் மகன்' திரைப்படத்தில் வெளியான “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” என்கிற பாடலை மற்ற சாதியினர் ஒரு இசை பேரனுபவமாக மட்டுமே உணர்ந்திருந்த வேளையில், அந்தப் பாடலின் பின்னணியில் தலித் மக்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறையை இந்த சமூகம் பெரும்பாலும் அறிந்திருக்காது.
Be the first to rate this book.