நாடெங்கும் சாதிக் கலவரங்கள். சாதிய சமூகத்தின் வெறித்தனமான முழக்கங்கள். தலித் மக்களின் உடைமை இழப்புகள், உயிர் இழப்புகள். வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் ஆதிக்க சாதியினர். மையநீரோட்ட அரசியலில் தமக்கான அடையாளம் தேடிச் சென்றுகொண்டிருக்கும் தலித் இயக்கங்கள்.வாழ்வியலில், சமூகப்-பொருளாதார-அரசியல் நிலைமைகளில் தலித் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு. இவ்விழிப்புணர்வின் விளைவான சிறிதளவு முன்னேற்றம். இவற்றைச் சகித்துக்கொள்ள முடியாமல் ஆதிக்க சாதியினரிடம் அதிகரித்துவரும் பதற்றம். சமீப ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் அதிகரித்துவரும் சாதி இந்துக்களின் வன்முறைகள் இவற்றின் ஒரு பகுதியே. சமத்துவத்தையும் சமூகநீதியையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் அனைவரும் இந்நூலை வரவேற்பார்கள்.
Be the first to rate this book.