மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராக நாடகம் நடத்தி வந்தார் மூவலூர் அம்மையார். இந்துமத வெறியர்கள் நாடக மேடை ஏறி அவரது கூந்தலை அறுத்து எறிந்தனர். இதற்கெல்லாம் அஞ்சாத அம்மையார் அதன் பிறகு தனது கொள்கைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினாரே தவிர நிறுத்தவில்லை. இந்து சனாதனிகளுக்குப் பதில் சொல்லும்விதமாக தன் இறுதிக்காலம் வரை தனது முடியை கிராப் செய்தே வாழ்ந்திருக்கிறார்.
1936 ஆம் ஆண்டில் திராவிடர் இயக்க முன்னோடி களில் ஒருவரான மூவலூர் இராமமிர்தத்தம்மாள் எழுதிய நாவல் “தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்”. இந்நாவலுக்கு தன்னுரை எழுதிய இராமமிர்தத்தம்மாள் இவ்வாறு கூறுகிறார்:
“இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கை யில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதோடு, மனைவி மக்களையும் திண்டாடச் செய்யும் வாலிபர் களின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும்” என்பதே, இந்நாவலின் குறிக்கோள்.
Be the first to rate this book.