பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல் வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
யார் இந்த ராமாமிர்தம் ?
மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராக நடகம் நடத்தி வந்தார் மூவலூர் அம்மையார். இந்துமத வெறியர்கள் நாடக மேடை ஏறி அவரது கூந்தலை அறுத்து எறிந்தனர். இதற்கெல்லாம் அஞ்சாத அம்மையார் தன் பிறகு தனது கொள்கைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினாரே தவிர நிறுத்தவில்லை. இந்து சனாதனிகளுக்குப் பதில் சொல்லும்விதமாக தன் இறுதிக்காலம் வரை தனது முடியை கிராப் செய்தே வாழ்ந்திருக்கிறார்.
1936 ஆம் ஆண்டில் திராவிடர் இயக்க முன்னோடி களில் ஒருவரான மூவலூர் இராமமிர்தத்தம்மாள் எழுதிய நாவல் “தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்”. இந்நாவலுக்கு தன்னுரை எழுதிய இராமமிர்தத்தம்மாள் இவ்வாறு கூறுகிறார்:
“இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கை யில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதோடு, மனைவி மக்களையும் திண்டாடச் செய்யும் வாலிபர் களின் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும்” என்பதே, இந்நாவலின் குறிக்கோள். ‘தமிழ்க் குடிஅரசு’ பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
Be the first to rate this book.