இரா. முருகன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். கணத்துக்குக் கணம் தன் இயல்பையும் சொரூபத்தையும் மாற்றி மாற்றி, கண்ணாமூச்சி காட்டும் வாழ்க்கையை அதன் காட்சி மாற்றத்துக்குச் சமமான வேகத்தில் இயங்கும் மொழியில் வசப்படுத்திக் கதை களக்குபவர். அசாத்தியமான காலப் பிரமாணம். அபூர்வமான சொல்லாட்சி, முருகனின் கதைகளில் சிக்கும் வாழ்க்கையில் முடிச்சுகளும் பிசிறுகளும்கூட ரசிப்புக்குரிய அம்சங்களாகவே அமைந்துவிடுகின்றன. ஐம்பது வயதைத் தொட்டிருக்கும் முருகன், முன்னதாக தேர், ஆதம்பூர்க்காரர்கள், சிலிக்கன் வாசல், முதல் ஆட்டம் போன்ற மறக்கமுடியாத சிறுகதைத் தொகுதிகளையும், மூன்றுவிரல் என்ற மிகச்சிறந்த நாவலையும், பல அருமையான குறுநாவல்களையும் தமிழுக்குத் தந்தவர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியாகப் பணி புரியும் முருகன், தற்சமயம் வசிப்பது பெங்களூரில் முருகன்.
Be the first to rate this book.