நமது வாழ்க்கை எந்த அளவிற்கு நவீனமாக மாறுகிறதோ அதே அளவுக்கு நாம் காணும், எதிர்கொள்ளும், செய்யும் குற்றங்களும் நவீனமாக மாறுகின்றன. இன்றைய நவீன உலகில், இணையம் மூலமும் செயலிகள் (App) மூலமும் ஒரு நிறுவனத்தின் தரவுகளை அல்லது தனி நபர்களின் தகவல்களை முறையான அனுமதியின்றி, பணம் பறிக்கவோ அல்லது வேறு சில தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ செய்வதுதான் சைபர் கிரைம். நம் நண்பர்களோ, உறவினர்களோ, ஏன் நாமே கூட இந்தக் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். கணினி இல்லாமலோ, மொபைல் இல்லாமலோ, செயலிகள் உபயோகப்படுத்தாமலோ இன்றைய காலகட்டத்தில் நம்மால் வாழமுடியாது. இப்படிப்பட்ட சூழலில், சைபர் கிரைம் மூலம் ஏற்படும் குற்றச் செயல்களை விளக்கி, அவற்றிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், மாணவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து வகையினரும் சைபர் கிரைமால் எப்படிப் பாதிக்கப்படலாம் என்று தெளிவாக விளக்கி இருக்கிறார் ப.சரவணன்.
Be the first to rate this book.