கட்டப் பஞ்சாயத்து தானே தெரியும் நமக்கு?அது என்ன’கப்’பஞ்சாயத்து?இங்கல்ல,ஹரியாணா,பஞ்சாப்,உ.பி,போன்ற வட மாநிலங்களில் கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வரும்’கப்’பஞ்சாயத்துகள் சாதியத்தின் துருப்பிடித்த ஆயுதமேந்தி நிகழ்த்துகின்ற கோரச் செயல்களையும்,காதல் திருமணம் செய்து கொள்ளவோ,திருமணத்தின் மூலமாக சாதியை மறுக்கவோ,தலித்தாகப் பிறந்திருப்பின் உயர்சாதிப் பெண்ணை மணந்து கொள்ளவோ முடியாத ஒரு இருட்டு உலகத்தை இந்நூல் உணர்வுப்பூர்வமான மொழி நடையில் விவரிக்கிறது.
Be the first to rate this book.