காடுகளில் காலம்காலமாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது மட்டும்தான் இந்த புலிப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒரே நோக்கமாக இருக்கிறது. இதற்காகவே குறும்படம் எடுக்கிறார்கள். புத்தகங்கள் வெளியிடுகிறார்கள். ஸ்டார் ஹோட்டல்களில் கருத்தரங்கம் நடத்துகிறார்கள். அதாவது, புலிகளைக் காப்பாற்றப்போகிறோம் என்ற அடிப்படையில் மக்களை கொல்லப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தத் தரப்பின் அடிப்படை நியாயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம். எதையாவது சொல்லி பழங்குடி மக்களை காடுகளை விட்டு வெளியேற்றச் சதி நடக்கிறது. முன்பு தொழில் வளர்ச்சி என்பார்கள். இப்போது புலி பீதி!
மக்களை அப்புறப்படுத்துபவர்கள் சுற்றுலாப் பயணிகளை மட்டும் அனுமதிப்பது எப்படி? கூடலூர் பகுதியில் சீஸன் நேரத்தில் ஒரு நாளைக்கு 6,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அந்தப் பகுதியில் 50 ஆயிரம் சதுர அடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புதிய வாகனங்களை வனத்துறை வாங்கியுள்ளது. மக்களை வெளியேற்றிய பின், இங்கு விடுதிகள் அமைத்து சுற்றுலாவை வளர்ப்பார்கள். எக்கோ டூரிஸம் என்பதுதானே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒரு லாபகரமான தொழில்.
Be the first to rate this book.