இந்த நூல் மாறுபட்ட நூல். பிரச்னைகளைப் பேசுகின்ற, அலசுகின்ற அதே வேளையில் தீர்வையும் செயல்திட்டத்தையும் தருகின்ற நூல்.
எந்த நோக்கங்களுடன் இறைவன் இந்தப் பேரிடரை ஏற்படுத்தியிருக்கின்றான் என்பது நமக்குத் தெரியாது. அவனுடைய நாட்டங்கள் என்ன? எந்த மனிதர்களை அவன் தண்டிக்க விரும்புகின்றான்? எந்த மனிதர்களை எச்சரிக்க நாடுகின்றான்? எந்த மனிதர்களை சோதிக்க விரும்புகின்றான் எதுவுமே நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்று. நாம் அனைவரும் இறைவனின் பக்கம் மீள வேண்டும். அவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும். பிழைகளைப் பொறுத்து அருளும்படி அவனிடம் மன்றாட வேண்டும். அத்தோடு நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆராயவேண்டும். தனிப்பட்ட வாழ்வையும் நடப்பையும் அன்றாட அலுவல்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கூட்டு நடத்தையையும் ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது.
இன்றைய சோதனைக்குரிய நாள்களில் சாமான்யர்கள் முதல் தலைவர்கள் வரை, பாமரர்கள் முதல் அறிஞர்கள் வரை, மாணவர்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
Be the first to rate this book.