மூத்த பத்திரிக்கையாளர் ராவ் எழுதியுள்ள இந்த நூல் நாற்பதைந்து ஆண்டுக்கால தமிழக வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டுத்தோற்றம். விடுதலைக்குப்பின்னர் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய தேர்தல்களைப் பற்றிய தகவல்களை விரிவாகச் சொல்கிறது. காங்கிரஸ் ஆட்சி, அதற்கு எதிராக உருவான மக்கள் எழுச்சி, அதன் மூலம் தோன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் நுழைவு, ஆட்சி, கழகங்களில் ஏற்பட்ட பிளவுகள் ஆகியவை தமிழக அரசியலில் என்னென்ன விளைவுகளைக் கொண்டு வந்தன என்பதையும் இந்த விளைவுகளுக்குப் பின் என்னென்ன ரகசியங்கள், பேரங்கள், தந்திரங்கள் செயல்பட்டன என்பதையும் நேர் சாட்சியாக இருந்து பார்த்த ராவ் சுவைபட விவரிக்கிறார் இந்த நூலில். இது அரசியல் ஆய்வு மட்டுமல்ல: காலத்தின் ஆவணம்.
Be the first to rate this book.