"தங்கள் குறைகளுக்குச் சர்க்கார் சிறிதும் செவிசாய்க்காமலிருப்பது கண்டு இந்திய ஜனங்களில் அறிவாளிகள் சிலர் கடுங்கோபங் கொண்டனர். மறுபடி ஜனநாயக முறையில்லாச் சர்க்காரை வீழ்த்திவிட தேச முழுதும் பல இடங்களில் சதி செய்யவும் ஆரம்பித்தனர். மக்களின் கேவல நிலைமையும் மனப்பான்மையும் பம்பாய், தட்சின விவசாயிகளின் கலக வாயிலாக வெளிப்பபட்டது. இந்த நிலையில்தான் மிஸ்டர் ஹ்யூம் இந்நாட்டினரின் துயர்களை அவ்வப்பொழுது சர்க்காருக் கெடுத்துரைத்துப் பரிகாரங்களையடைய ஒரு தேசிய ஸ்தாபனம் நிறுவ வேண்டுமென நினைததார். இந்த எண்ணத்தின் விளைவாகவே இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்டது."
Be the first to rate this book.