தமிழிலேயே எளிதாகப் படித்துப் புரிந்து கொண்டு செயல்படுத்த முன்வரும் எவருக்கும் இது சிறந்த வழிகாட்டியாக அமையும். யார் வேலை கொடுப்பார்கள் என்று தேடிக் கொண்டு நிற்காமல் நாமே பலருக்கு வேலை கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இந்நூல் அமையப் பெற்றிருப்பதால் எவர் வேண்டுமானாலும் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம்.
கம்ப்யூட்டர் சார்ந்த... கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்கள் நிறைய இருக்கின்றன. அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு என்னென்ன புதிய தொழில்களை உருவாக்கலாம் என்பதற்கு இதில் யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவற்றைச் செயல்படுத்தினால் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் மறையும். புதிய சேவைகள் அறிமுகமாகும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்கள் என்றாலே அது சாப்ட்வேர் உருவாக்கம் தொடர்பான தொழில் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தமிழக இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இந்தத் துறையில் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்பது உண்மைதான்.
ஆனால்...கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட வேண்டுமானால் கம்ப்யூட்டரில் திறமை மிக்கவர்களால் மட்டுமே அது முடியும் என்ற மாயை உலகில் நிலவுகிறது. இதனைத் தகர்த்து யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தொழில்களைச் செய்ய முடியும் என்பதை விளக்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.