என்னையே பாருங்க, காலைல பத்து மணி வரைக்கும் தூங்க முடியுது. மெல்ல நாஷ்தா பண்ணிட்டு மெல்ல குளிச்சுட்டு மார்னிங் ஷோ, நூன் ஷோ பார்த்துவிட்டு சாப்ட்டுட்டு என்ன ரிலாக்ஸா இருக்க முடியுதுங்க. என்ன கொஞ்சம் நாலு முறை மூணு முறை கஸ்டமர்ங்ககூட போவணும். சுலபமான வாழ்க்கைங்க. எதுக்காக என்னைச் சீர்திருத்த பாக்கறிங்க. யாராவது போலீஸ் ஆபீசரு கல்யாணம் பண்ணிக்குவாரா என்ன. காலை எட்டு மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. ரமணன், தனை ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவன், மைசூர் ரோடிலிருந்து ஆர்.வி. காலேஜின் அருகில் கைகாட்டாமல் திருப்பினான். இடப்பக்கத் திருப்பம்தான் ஆனால் சாலையின் மத்தியிலிருந்து திரம்பியதால் அதிவேகத்தில் அவன் பின்னே வந்து கொண்டிருந்த ஃபியட் கார் அவனை இடப்புறமாகக் கடக்க நினைத்த அந்தக் கணத்தில்தான் ரமணணும் திரும்பத்தீர்மானித்தான். காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் சமூகத்துக்கு சேவை செய்யலாம் என்கிற தணியாத தாகத்துடன் பெங்களூர் காவல்துறையில் சேருகிறார் ஓர் இளம் பெண். அவளின் மென்மையான மனத்தை தாக்கும் அதிர்ச்சிகள், காதல்கள் கடந்து கடமையாற்றும் விதத்தை விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்த பரபரப்புநாவல்
Be the first to rate this book.