2000-களில் வலைப்பூவில் தீவிரமாக எழுதியவர்கள், அதிலிருக்கின்ற சிறப்பம்சமாக கட்டுப்பாடற்ற எழுத்து நீளத்தைப் பெற்றவர்கள் தீவிர இதழ்களைப் போன்றே பக்க வரையறை இல்லாமல் எழுத ஆரம்பித்தார்கள். அதனைக் கொண்டே சிறப்படைந்த சிலரும் இருக்கிறார்கள். அன்று ஐந்து நொடியில் பிடிக்கவில்லை என்றால் ஸ்கிப் செய்யக் கற்றுக் கொடுக்கப்படவில்லை. வளன் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
பல கதைகளில் நவீன ஓவியங்களும், சிற்பங்களும் வருகின்றன. அம்முவும், நகீமாவும் சிற்பங்களைப் போன்றவர்கள். பாஸ்டனின் இரவு வான்காவின் ஓவியம் போல் இருந்தது. இசையோ, ஓவியமோ கதைகளுக்கு நடுவேயும் உரிப்பொருளாகவும் சரியாகப் பொருந்தும்போது அந்தப் படைப்பு தன்னை வசீகரப்படுத்துவதோடு மேன்மை கொள்ளவும் உதவுகிறது.
- எழுத்தாளர் ஜீவ கரிகாலன்
Be the first to rate this book.