காமிராக்களின் காலத்தில் ‘க்ளிக்’ என்னும் வார்த்தையும், அதற்கு அர்த்தமும் பழக்கமானது. சதா நேரமும் அசைந்து கொண்டிருக்கும் உலகில் ஒரு காட்சியை அப்படியே அசையாமல் நிறுத்தி வைக்கும் காரியம் ‘க்ளிக்’ ஆனது. இன்று கம்ப்யூட்டர்களின் காலம். ‘க்ளிக்’ மவுசிற்கு இடம்பெயர்ந்துவிட்டது. ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு அசையும் காரியமாக ‘க்ளிக்’ புழக்கத்தில் இருக்கிறது. வெற்றி, தோல்விக்கு குறியீடாகவும் அறியப்படுகிறது. ‘க்ளிக் ஆகிவிட்டது’. ‘க்ளிக் ஆகவில்லை’ என மனிதர்கள் சர்வசாதாரணமாக பேசிக் கொள்கின்றனர்.
பழைய காலத்தின் மதிப்பீடுகளை, கற்பிதங்களை, புரிதல்களை, பழக்க வழக்கங்களை எல்லாம் புதிய காலம் மறுபரிசீலனை செய்து புனரமைக்கிறது. புதிய அர்த்தங்களை தருகிறது. ஆணும், பெண்ணும் அவர்களின் உறவுகளும் அதற்கு விதிவிலக்கா? தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்காலத்தில் ஆண் பெண் உறவு என்னவாகி இருக்கிறது என்பதை ஒரு கதையாய் சொல்கிறது இந்த நாவல்.
Be the first to rate this book.