சினிமா உலகில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதியவர், ஆரூர்தாஸ். 1000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உள்பட) வசனம் எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக் கூடிய அளவுக்கு உலக சாதனை புரிந்தவர். திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் ஒரே நேரத்தில் வசனம் எழுதியது இவரது இன்னொரு சாதனையாகும். திரை உலகில் இவர் நீண்ட காலம் பவனி வந்ததால் இவர் பழகாத நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் இல்லையென்றே சொல்லலாம். நாம் திரையில் பார்க்கும் சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரமுகர்கள் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை.
அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். அவர் தனது திரை உலகப் பயணத்தையும், அதோடு சினிமாவின் மறுபக்கத்தையும் "தினத்தந்தி" பத்திரிகையில் 102 வாரங்கள் தொடர்ந்து தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். இதில் வெளியான கட்டுரைகளின் ஒரு பகுதியைத் தொகுத்து "சினிமாவின் மறுபக்கம்" என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.
பாசமலர்" படம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதியது; அதே நேரத்தில் எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்று அதற்கு இணையாக அவரது படங்களுக்கு வசனம் எழுதியது; பட அதிபர் சின்னப்பா தேவரின் சுறுசுறுப்புக்கு ஈடுகொடுத்து, ஒரு நாளில் 20 மணி நேரம் உழைத்து விறுவிறுப்பான வசனங்களை எழுதிக்கொடுத்து பாராட்டுகளைப் பெற்றது; ஜெமினி கணேசன்&சாவித்திரி அறிமுகம் கிடைத்தது
எப்படி? என்பன போன்ற எண்ணற்ற சம்பவங்களைச் சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.
மேலும் பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா, சவுகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெயசித்ரா, ராணி சந்திரா, வெண்ணிற ஆடை நிர்மலா நடிகர்கள் எம்.ஆர்.ராதா, சிவகுமார்,ரஞ்சன், ஆனந்தன் டைரக்டர்கள் பீம்சிங், எம்.ஏ.திருமுகம், கிருஷ்ணன் & பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர் போன்றோரிடம் பழகிய அனுபவங்களை அழகிய முறையில் விவரிக்கிறார். எம்.ஜி.ஆர்.பார்த்து ரசித்த சிவாஜி படம்; சின்னப்பா தேவர் & எம்.ஜி.ஆர். இடையே நட்பில் விரிசல்;எம்.ஜி.ஆரின் பூர்வீகம்; விதி வலையில் வீழ்ந்த எம்.ஆர்.ராதா; மயங்கிச் சாளிணிந்தார் எம்.ஜி.ஆர்,மடியில் தாங்கினார் சிவாஜி என்பன போன்ற யாருக்கும் தெரியாத ரகசியங்களை வெளிக்கொணர்கிறார். மொத்தத்தில் சினிமாவை நேசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் தெவிட்டாதவிருந்து.
ஆரூர்தாஸ்
1,000 படங்களுக்கு வசனம் எழுதியவர்... வசனம் எழுதுவதில் அரிய சாதனை படைத்தவர், ஆரூர்தாஸ். டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுபவராக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஆரூர்தாஸ், 1000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உள்பட) வசனம் எழுதியுள்ளார். இது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய உலக சாதனை. திரை உலகில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் ஒரே சமயத்தில் வசனம் எழுதியது இன்னொரு சாதனை. சிவாஜிக்கு இவர் வசனம் எழுதிய படங்களின் எண்ணிக்கை 28. எம்.ஜி.ஆருக்கு எழுதிய படங்கள் 21. திரை உலகில் நீண்ட காலம் பவனி வந்ததால், இவர் பழகாத நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள், பாடகர்கள், பாடகிகள் அநேகமாக எவரும் இல்லை. கற்பனையான சினிமா கதைகளைவிட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ். அவர், தன் திரை உலகப் பயணத்தை மட்டுமல்ல, சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
Be the first to rate this book.