சினிமா வியாபாரம் என்பது தற்போதைய சூழலில் கார்ப்பரேட்கள் கைகளிலும்,பெரும் முதலாளிகள் கைகளிலும் சிக்கியுள்ளது.இவர்கள் கைகளில் சினிமா சிக்கியிருக்கும் வரை நல்ல சினிமா வெளியாவதற்கான எவ்வித சாத்தியங்களும் இல்லை.திரையரங்கில் வெளியாவது,தொலைக்காட்சி உரிமை போன்றவைகளை தவிர்த்து படமெடுக்க செய்யப்பட்ட முதலீட்டை வேறெப்படி திரும்பப்பெறுவது,அதற்கு திரைப்பட விழாக்களும்,விருதுகளும் எவ்வகையில் உதவுகிறது,அதில் என்ன விதமான அரசியல் இருக்கிறது,அதனை எப்படி சரிசெய்வது போன்ற பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைத்து எழுதப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.நல்ல சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களும்,சினிமாவின் மாற்று சந்தைகளை தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.