இந்திய சினிமா, ஆங்கில மற்றும் உலக சினிமா, திரைப்படம் சம்மந்தப்பட்ட சில புத்தகங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிப்பு (மெதட் ஆக்டிங்), தமிழ் சினிமா, காமிக்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. இந்தத் தலைப்புகளில் உலகின் சில முக்கியமான நபர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் விரிவாக இந்தப் புத்தகம் விவாதிக்கிறது.
புத்தகத்தை எழுதியிருக்கும் ‘கருந்தேள்’ ராஜேஷ், தமிழ்த் திரைப்படங்களில் ஒரு Screenplay Consultant. திரைக்கதைகளைப் படித்து, இயக்குநர்களுடன் விவாதித்து, அதைச் சிறந்த முறையில் செப்பனிட்டு, ஒரு முழுமையான திரைப்படமாக அதனை உருவாக்குவது இவரது பணி. திரைப்படக் கல்லூரிகளில் திரைக்கதை பற்றிய விரிவுரைகளையும் தொடர்ந்து ஆற்றிவருகிறார். ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற இவரது முந்தைய புத்தகம் மிகவும் பிரபலமானது. www.karundhel.com என்ற தனது வலைத்தளத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சினிமா பற்றி விரிவாக எழுதிவருகிறார் கருந்தேள் ராஜேஷ்.
தமிழ் இந்து நாளிதழில், ஒவ்வொரு வெள்ளியும் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இவைதவிர, தமிழ் இந்துவுக்காக ராஜேஷ் எழுதிய வேறு சில திரைப்படம் சார்ந்த கட்டுரைகளும் இதில் உள்ளன. திரைப்படம் என்பது நமக்குள் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்த வல்லது என்ற முறையில், ஒரு திரைப்படத்தின் பல்வேறு அங்கங்கள், அவைகளை உருவாக்குபவர்கள், அவை தரும் உணர்வுகள் என்று மிக விரிவாக அலசி எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.
Be the first to rate this book.