“கல்விப் புலத்துக்கு வெளியேயும் சினிமா எனும் ஊடகத்தைப் பற்றிய அக்கறையின்மையை எல்லாத் தளத்திலும் நாம் காணலாம். ஒரு சமூகத்தின் சினிமாவிற்கு இயக்குநர், தயாரிப்பாளர் மட்டும் பொறுப்பல்ல; திரைப்படங்களைப் பற்றி எழுதுபவர்கள், சிந்திப்பவர்களுக்கும் பொறுப்பிருக்கின்றது.”
இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன. அத்துடன் மௌன யுகத்தின் நிர்ப்பந்தங்கள் எவ்வாறு தமிழ்த்திரையின் அம்சங்களை உருவாக்கின; இந்திய, தமிழக வரலாறு ஒரு திரைக்கதைச் சுரங்கம் போன்றிருந்தாலும் வெகு சில வரலாற்றுப்படங்களே தமிழில் உருவாக்கம் பெற்றிருப்பது ஏன் போன்ற கேள்விகளையும் இந்நூல் எழுப்புகின்றது.
Be the first to rate this book.