தமிழ் நாட்டில் புனிதப் பிம்பங்கள் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கும் பல நடிகர்களின் மீது அவர்களின் நடிப்பு சார்ந்தும், அரசியல் சார்ந்தும் வெங்கட்சாமிநாதன் முன்வைக்கும் விமர்சனம் கவனத்திற்குரியது. கமலஹாசனின் எல்லா ஃபிரேம்களிலும் தான் தெரிய வேண்டும் என்கிற மோசமான எண்ணத்தையும், சிவாஜி கணேசனின் நாடகத்தனமான நடிப்பையும் பற்றி தொடர்ந்து இந்தக் கட்டுரைகளில் பதிவு செய்து வந்திருக்கிறார். தொடர்ச்சியாக சினிமாவின் வடிவம், அழகியல் பற்றி எழுதியும், அத்தகைய படங்களை தங்களுடைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியும், தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல சினிமா பற்றிய புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
Be the first to rate this book.