இந்தியத் திரையுலகில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தன் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா,மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர். அவர்களில் எவரும் தங்களது திரைக்கலையைக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகி அதை அடூரைப் போல் பகிர்ந்துகொண்டதில்லை. அடூர் முன்வைக்கும் கோட்பாடுகள் அவரது கலையனுபவங்கலிலிருந்து உருவானவை.அந்த அனுபவங்கலின் பிறப்பையும் வளர்ச்சியையும் அவை கோட்பாடாக நிலைபெறும் முறையையும் தேர்ந்த எழுத்தாளனின் லாவகத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.
நூலின் முதல் பகுதியிலுள்ள கட்டுரைகள் செயல்பாட்டிலிருந்து உருவான கோட்பாடுகளின் குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் பகுதி சினிமாவைச்சார்ந்த அறிமுகங்களின் உறவுகளின் நினைவுகூரல். ஒரு கலையின் வரலாறு என்பது நிறுவப்பட்ட கருத்துகளின் தொகுப்பு அல்ல. அதில் இயங்கியவர்களின் மனமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இழைந்து பின்னப்பட்டது என்ற நிஜத்தை முன்வைக்கிறது.
Be the first to rate this book.