சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அழகியல் அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத் தன்மையைக் கடுமையாகச் சாடும் சாருநிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட படங்கள், இயக்குனர்களைக் காட்டிலும் மாற்று சினிமா மொழியை உக்கிரமாகக் கையாண்ட கத்ரீன் ப்ரேலா, ஒட்டிஞ்ஜர், பசோலினி, ஹொடரோவ்ஸ்கி போன்றவர்களே சாருவின் அக்கறைக்குரியவர்களாக இருக்கிறார்கள். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.
Be the first to rate this book.