உலக வல்லரசான அமெரிக்காவின் உளவுத்தகவல்கள் அனைத்து நாடுகளுக்கும் தேவைப்படுகின்றன. உலகளாவிய பயங்கரவாதத்தை இன்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் உதவியின்றி எதிர்கொள்ள முடியாது.
அதிநவீனத் தொழில்நுட்ப வசதி, மிகச் சிறந்த கட்டமைப்பு, உலகளாவிய தகவல் தொடர்பு, பயிற்சிபெற்ற நிபுணர் குழு என
சிஐஏ எப்படி இன்று உலகளாவிய பாதுகாப்பை உறுதிசெய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளது என்பதை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர் விதூஷ்.
அதேவேளை, தன் கொள்கைக்கு எதிரான நாடுகளில் சிஐஏ உண்டாக்கும் போராட்டங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், படுகொலைச் சம்பவங்கள், பொருளாதார இழப்புகள், முக்கியமாகக் கொள்கை எதிரிகளுக்கான சிஐஏவின் வதைமுகாம்கள் போன்றவற்றையும் ஆராய்ந்து, சிஐஏவின் இன்னொரு முகத்தையும் தோலுரித்துக் காட்டுகிறார்.
சிஐஏவின் செயல்பாடுகள் குறித்து மட்டுமின்றி, சிஐஏ மற்றும் கேஜிபிக்கு இடையேயான பனிப்போர் குறித்தும் விரிவாக எழுதப்பட்டிருப்பது இந்த நூலின் இதன் சிறப்பு.
Be the first to rate this book.