நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின்உள்ள கதைகளை, ஓவியனின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர்களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள். இன்றைய சினிமா அதன் ஒளிப்பதிவு முறையில் அதிகம் ஓவியங்களின் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களான ஸ்டேரெரோ, வில்மாஸ் சிக்மண்ட், நிக்விஸ்ட், கார்டன் வில்லிஸ் போன்றவர்கள் தங்களது உந்து சக்தியாக ஓவியர்களையே குறிப்பிடுகிறார்கள். சித்திரங்களின் விசித்திரங்கள் தீராநதியில் தொடராக வெளிவந்து பரந்த வாசகர்களின் கவனத்தைப் பெற்றது.
Be the first to rate this book.