உயிரைப் பணயம் வைத்து... காவல்துறையின் கண்களுக்கு புலனாகாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக. கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்தும், பேட்டி எடுத்தும் அதனை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலம் அம்பலப் படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றது நக்கீரன்.. நக்கீரன் கோபால் அவர்களும், அவரது பத்திரிகை நிருபர்களும் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களோடு நெருங்கி உண்மைகளைக் கண்டறிந்து, அவைகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய வரலாற்று நிகழ்வுகளில், ஆசிரியர் கோபால் அவர்களின் இந்த "சித்ரவதை" தலைப்பிலான நூல், அதிகார வர்க்கத்தின். அதிரடிப்படையின் அட்டூழியத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை.... சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல்ரீதியான, மன ரீதியான பாதிப்புக்களை ஆதாரங்களோடு வெளிக் கொணர்ந்திருக்கிறது. 32 தலைப்புக்களில் ஆசிரியர் கோபால் அவர்களுடைய எழுத்தாக்கம் மற்றுமொரு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அளிக்கப்பட புதினமாகும். பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பிய கடிதங்களை வைத்து நேரடியாக களத்தில் விசாரணை செய்து அம்பலப்படுத்திய பல்வேறு சித்ரவதைகள் குறித்த நிகழ்வுகளை நேர்த்தியாக இந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார் நக்கீரன் கோபால். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகத்தின் காடுகளிலும் நடத்தப்பட்ட சித்ரவதைக் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது இந்த நூல்.
Be the first to rate this book.