த்திரைத் திருநாளுக்கும் மலர் கொண்டு வருவது ‘தி இந்து’ குழுமத்தின் தனிச் சிறப்பு. 'தி இந்து' குழுமத்தின் 'தமிழ் திசை' இந்த சித்திரைக்கு சிறப்பு சேர்க்க 'சித்திரை மலர் - 2018'யைக் கொண்டுவந்துள்ளது, இந்த மலருக்கென்று தனி மணமும் குணமும் உண்டு.
இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்கள், உலக நாடுகளுக்கே கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அனுபவத்தைத் தருகின்றன இந்த மலரில் இடம்பெற்றுள்ள பயணக் கட்டுரைகள். எழுத்தாளர் மகுடேசுவரன், இயக்குநர் அம்ஷன் குமார் உள்ளிட்டோர் இந்தப் பகுதிக்குப் பங்களித்துள்ளனர்.
தமிழகத்துக்கு வளம் சேர்த்துவரும் காவிரி நதியின் முடி முதல் அடி வரையிலான நெடும் பயணத்துக்கு நம்மையும் உடன் அழைத்துச் செல்கிறது 'காவிரியின் மைந்தர்கள்' சொற்சித்திரம்.
வேதாரண்யம் உப்பளம், பூம்புகாரின் எளிய மனிதர்கள், புதுச்சேரியின் கவின்மிகு பிரெஞ்சு கட்டிடங்கள் ஆகியவற்றைப் பற்றி கண்கவர் காட்சிகளாக இந்த மலரில் விரிந்துள்ள ஒளிப்படத் தொகுப்புகள், முற்றிலும் புது அனுபவத்தைத் தரும்.
தமிழ் பண்பாட்டின் பெருமைகளை உலகறியச் செய்த தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், அ.கா.பெருமாள், பக்தவத்சல பாரதி, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களின் முக்கியத்துவத்தை 'பண்பாடு' பகுதிக் கட்டுரைகள் பேசுகின்றன.
சைவ சமயக் குரவர் நால்வரின் சமயப் பணிகள், ஆழ்வார் பாசுரங்களின் தாய்மைப் பண்பு, பண்டரிபுரம் விட்டோபாவை காலந்தோறும் மக்கள் எப்படிப் போற்றி வருகிறார்கள் என்பதைப் பற்றிய ஆன்மிகக் கட்டுரைகளும் தனிச் சுவை மிக்கவை.
பெண்களின் உரிமைகளுக்காக நாடெங்கும் குரல் கொடுத்து வரும் சுனிதா கிருஷ்ணன், கமலா பாசின், பினாலக்ஷ்மி உள்ளிட்டோரை அறிமுகப்படுத்துகின்றன 'வானவில் பெண்கள்' என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள சிறப்புக் கட்டுரைகள்.
பங்களித்துள்ள முக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள்:
இயக்குநர் அம்ஷன் குமார்
எழுத்தாளர் நக்கீரன்
பேராசிரியர் அ.கா. பெருமாள்
எழுத்தாளர் மகுடேசுவரன்
எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.
டாக்டர் வி. விக்ரம்குமார்
எழுத்தாளர் சைபர் சிம்மன்
எழுத்தாளர் வீ.பா. கணேசன்
ஒளிப்படக் கலைஞர் என். செல்வன்
ஒளிப்படக் கலைஞர் அபுல் கலாம் ஆசாத்
Be the first to rate this book.